காணாமல் போன 7ம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்கப்பட்டது தொடர்பாக... | Regarding the recovery of a missing 7th grade student in Chennai... கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காணாமல் போன 7 ஆம் வகுப்பு மாணவன், சென்னையில் மீட்கப்பட்டுள்ளார்.ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெருவைச் சோ்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் சஞ்சய் (12), ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடுதிரும்பியப் பிறகு, டியூஷன் செல்வதாகக் கூறி சென்றுள்ளார். நீண்டநேரம் ஆகியும் சஞ்சய் வீடுதிரும்பாததால், அவரது பெற்றோா் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.