கனமழையின்போது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். எனினும் மதியம் மேகமூட்டம் காணப்பட்டு மாலை அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரைக்கு ரெட் அலர்ட் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (25.10.2026) ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. இநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று இரவு மதுரை மாநகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.