மதுரை: மதுரை மாநகராட்சியில் உள்ள 15 அதிமுக கவுன்சிலர்களும் ஒட்டுமொத்மாக தவெகவிற்கு மாற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஓராண்டாக அத. மதுரை: மதுரை மாநகராட்சியில் உள்ள 15 அதிமுக கவுன்சிலர்களும் ஒட்டுமொத்மாக தவெகவிற்கு மாற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஓராண்டாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் என்று தவெக-வுக்கு படையெடுப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் மும்மூர்த்திகளான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சியை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால், முக்கிய நிர்வாகிகள் யாரும் இதுவரை தவெகவுக்கு செல்லவில்லை.