தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட். மேலும் 14 மாவட்டங்களில் மிக கனமழை, 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. WhatsAppFacebookXLinkedInTelegramShare தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25-ந் தேதி) தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த 3 மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.