மதுரை மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு ‘விபத்தில்லா பயணம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பெரியாா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு ‘விபத்தில்லா பயணம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பெரியாா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது..தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அ. தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் விபத்தில்லாமல் வாகனங்களை இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தாா்..மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடம் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும்.