அரசுப் பள்ளி மாணவர்களிடம் அனுமதியின்றிக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகைகளில் முறைகேடு உறுதிச் செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாரர் கோரியிருந்தார். மதுரை: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதுகுறித்து பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரூரைச் சேர்ந்த மலைக்கொளுந்தன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.