கன்னியாகுமரியில் இருந்து சேலம் வழியாக புனே சென்ற விரைவு ரயிலில் விட்டுச் சென்ற பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனா். இந்த ரயிலின் பின்புறத்தில் உள்ள பொதுப்பெட்டியில் ஒரு மாதமே ஆன பெண் குழந்தை யாருடைய துணையும் இன்றி தனியாக இருப்பதாக சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது..இதையடுத்து, பொம்மிடி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலா் ரமேஷ், அந்தக் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்தாா்..தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா், அந்தக் குழந்தையை கொண்டுவருவதற்காக தலைமைக் காவலா் அம்சவள்ளியை அனுப்பிவைத்தனா்.