A 5.7 magnitude earthquake struck western Shizuoka in Japan early today, injuring at least 22 people(ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்): Japan Earthquake latest news in tamil. டோக்கியோ: ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 22 பேர் காயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இயக்கப்பட்ட ஷிங்கன்சென் புல்லட் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது.ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்.