நியூசிலாந்தில் நடந்து வரும் ஒருநாள் தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. உலகில் இன்று 3 வடிவ கிரிக்கடெட்டிலும் ஒரு முதன்மையான அணியாக திகழ்வது இந்தியா. குறிப்பாக, வெள்ளை நிற பந்து போட்டிகளான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தி வருகிறது. அடுத்தாண்டு உலகக்கோப்பை: ஐபிஎல் தொடர்களுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரன்மழையைப் பொழிந்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் நடக்கும் வெள்ளை நிற பந்து போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகளவிலே காணப்படுகிறது. அதற்கு கடந்த கால இந்திய போட்டிகளில் ரன்மழையை எடுத்துப் பார்த்தாலே புரியும்.