காலை தொடங்கிய விற்பனை நள்ளிரவு வரை நீடித்ததால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர். அதேநேரத்தில் மாலை பெய்த திடீர் கனமழையால் சாலையோர தரைக்கடை வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். திருச்சியில் தீபாவளி விற்பனை களை கட்டியதுSource : Abpnadu Original திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் இறுதிக்கட்ட விற்பனை நேற்று களைகட்டியது. புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கடைவீதிகளில் குவிந்தனர். இதனால் முக்கிய வர்த்தகப் பகுதிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.