தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் இன்று தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதல் தொடர்ந்து பெய்து வந்த மழை, பின்னர் முரசு புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் தீவிரமாக பெய்தது. குறிப்பாக, தென் தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது. தொடங்கியது மழை: தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் காலையிலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.