கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நிரந்தர குடியுரிமை குறித்த அறிவிப்புSource : Abpnadu Original ஒட்டாவா: கனடாவில் தற்காலிகக் குடியேற்ற அந்தஸ்துடன் வசித்து வரும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நீண்டகாலமாக கனடாவில் தங்கி வேலை செய்து வருபவர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அங்கு வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.