தீபாவளி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொடர் மழை காரணமாக சென்னைவாசிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது பட்டாசுகளே ஆகும். பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகை முடிந்தால் அது தீபாவளி கொண்டாடிய உணர்வே மக்களுக்கு இருக்காது. காலை முதல் மழை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை நாளான இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது.