நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா த்ரில் வெற்றி. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றிSource : BCCI நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. மழை காரணமாக, ஆட்டம் தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை அடித்தார்.