ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு புதிய அல்பா-நியூமரிக்கல் குறியீடு கொண்ட காசோலை கட்டாயம். 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் புதிய காசோலை விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 50,000-க்கும் குறைவான தொகையை பரிவர்த்தனை செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும் எனவும், ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு புதிய அல்பா-நியூமரிக்கல் குறியீடு கொண்ட காசோலைகளைப் பயன்படுத்துவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலைகளில் இதுவரை வெறும் எண்கள் மட்டுமே காசோலை எண்ணாக இருந்தன. இனி வங்கி, கிளை மற்றும் மண்டலக் குறியீடுகள் இணைந்த எழுத்துகள் மற்றும் எண்கள் கலந்த (Alphanumeric) குறியீடு இடம்பெற உள்ளது.