இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக உலா வருபவர் முகமது ஷமி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த முகமது ஷமி இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். முகமது ஷமி ஓய்வு: இந்த நிலையில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 13 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்ட முகமது ஷமி இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது, வெள்ளை நிற சீருடையில் இருந்து விடைபெறுகிறேன்.