நடிகர் அஜித்குமார் கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய நிலையில், விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கருதப்படுகிறது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது அவரது போட்டியாளராக திகழ்ந்தவர். தற்போது கார் பந்தயத்திலும் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், டேர்டெவில் எனும் படத்தில் நடிக்க உள்ளார். சென்னை திரும்பிய அஜித்: சர்வதேச கார் பந்தயங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அஜித்குமார் பங்கேற்று வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து அஜித்குமார் நேற்று சென்னை திரும்பியுள்ளார்.