தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் தீபாவளி மற்றும் பொங்கல். இந்த இரு பண்டிகைகளையும் மொத்த தமிழ்நாடும் திருவிழா போல கொண்டாடுவார்கள். நாளை தீபாவளி: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் களைகட்டி காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.