அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பலனளிக்கும் வெற்றி மடிக்கணினி திட்டம். ரூ.2000 கோடி மதிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்கும் நிலையில், மாணாக்கர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும்.