தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும் என்று ஓம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீலீலா பேசியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். சமீபகாலமாக இவரது செயல்பாடுகள் அரசியலுக்கு அச்சாரமிடுவது போலவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இவர் நடிப்பில் வெளியாக உள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஆன்மீக உணர்வு: சென்னை, தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஸ்ரீலீலா பேசியதாவது, "தனுஷ் நடந்து வரும்போது அவர் மீது திருநீறு வாசனை வரும். அது ஒரு விதமான ஆன்மீக உணர்வைத் தருகிறது.