வைதீக முறையில் தனது பேத்திக்கு திருமணம் நடந்தது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம். தனது இல்லத் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், திமுக எம்பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை திருமணம் கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. திராவிட இயக்கத் தலைவர் கீ.வீரமணி இந்தத் திருமணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது பேத்தியின் திருமணம் ஏன் வைதீக முறைப்படி நடந்தது என்று துரைமுருகன் விளக்கம் கொடுத்துள்ளார்.