சென்னை வந்த மீனவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்க்ள் நள்ளிரவு நேரத்தில் நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.