Ration Card Holder: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 2.54 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், சிவப்பு ரேஷன் கார்டு மற்றும் மஞ்சள் ரேஷன் கார்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக, ரொக்கமாக நேரடி பயனாளர் பணப் பரிமாற்றத் திட்டத்தின் (Direct Benefit Transfer – DBT) கீழ், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.