Goat Covered in Dollar Bills.. What Happened to the Animal on the Road? Why $10,000 Reward? நியூயார்க்: அமெரிக்காவில் ஆட்டுக்குட்டி ஒன்றின் உடம்பு முழுவதும், டாலர் நோட்டுகளை ஒட்டி, அதை சாலையில் ஓடவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கடைசியில் அந்த ஆட்டுக்குட்டி என்ன ஆச்சு தெரியுமா? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஹியாலியா என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.. வெஸ்ட்லேண்ட் மால் அருகிலுள்ள பார்க்கிங் ஏரியாவில், ஆட்டுக்குட்டி ஒன்று தனியாக ஓடிக்கொண்டிருந்தது.