மணிப்பூரில் மீண்டும் இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு மணிப்பூரின் நோனி மாவட்டத்தின் தவுடைஜாங் பகுதியில், நாகா பிரிவை சேர்ந்த இரு ஆயுதக்குழுக்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரியவருகிறது. இத்தாக்குதல் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகினர். இதில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஒலிப்பெருக்கி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வன்முறை முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் மீண்டும் தலையெடுக்கும் கலவரம்?