40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு சுருண்ட நியூசி.அணி - 186 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கும் இந்திய அணி. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்டது. 185 ரன்களில் சுருண்ட நியூசி.அணி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஏடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.