TNPSC Group-4: டிஎன்பிஎஸ் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கடைசி நாளாகும். இதுவரை எந்த லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம். டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட என்பதால் குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்த வரையில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.