Diwali Special Bus 2026: சென்னையில் 16 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன - போக்குவரத்துத்துறை அமைச்சர். தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் சென்னையிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் ஏதுவாக சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.