Diwali Special Train 2026: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள்Source : twitter பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் பொதுமக்கள் எந்தவித டென்ஷனும் இல்லாமல் சிறப்பாக கொண்டாடும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.