Diwali Bonus: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகி வரும் தற்போது மற்றொரு நிறுவனத்துக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.