சிறை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் சிறைக் காவலர்கள் தரப்பிலிருந்தும் ஒருவரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றும் சிறைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை: மதுரை மத்திய சிறையில் தலைமை காவலரை கைதி ஒருவர் முகத்தில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய சிறையில் தற்போது 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சிறையின் சி-பிளாக் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் குளிப்பதற்காக வெளியே வந்துள்ளனர். அப்போது பாதுகாப்புப் பணியில் நான்கு காவலர்கள் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.அந்தப் பகுதியில் கைதி மூர்த்தி (44) என்பவர் குளியலறையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.