கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள உதவியாளர்கள், ஆய்வாளர்கள் ஆகிய காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கமலி உறுதியளித்துள்ளார். சேலம்: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவவில்லை என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, அரசு கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு இன்று (நவ.4) நேரில் சென்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சேலம் கால்நடை பராமரிப்புத்துறை இயக்கக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் மருத்துவமனையின் தேவை குறித்தும் கேட்டறிந்தார்.