ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவு. அந்த வகையில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள லிவிங்ஸ்டன், அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர். குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கி குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்கும் திறன் அவரிடம் இருப்பதால்,சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசைக்கு அவர் கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். .