தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு அவர் மோதிரத்தை அணிவித்தார். இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை பிறந்த 5,173 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட்டது.