அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தல். தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணிவரையலும், இரவு நேரத்தில் 7 முதல் 8 மணி வரையிலுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென தமிழக அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள், அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.