கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.