நடிகர் சூர்யா நடிப்பில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஆண்டில் 3வது திரைப்படம் ரிலீசாகிறது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள தீபாவளி வெளியீடாக வர உள்ள திரைப்படம் சீன். தீபாவளி விருந்தாக சீன்: நீண்ட காலமாக பெரியளவில் வெற்றிப் படங்கள் அளிக்க முடியாமல் தடுமாறி வந்த சூர்யாவிற்கு இந்தாண்டு இனிப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம். இந்த படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான விஸ்வநாத் அன் சன்ஸ் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.