கரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் தவெக தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சமீீபத்தில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக அபார வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் இன்னும் கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் திருச்சி கிழக்கு தவிர எஞ்சிய 4 தொகுதிகள் அதிமுக வசம் இருந்தவை. அதிமுக-வைக் காட்டிலும் தவெக-வே தற்போது திமுக-விற்கு மிகப்பெரிய அரசியல் எதிரியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மு.க.