ஓமன் கடற்பகுதி அருகே இந்திய வணிகக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். வணிகக்கப்பல் மீது தாக்குதல்: ஓமன் கடற்பகுதியில் பயணித்த MSV AL JUSIFI எனும் இந்திய வணிகக்கப்பல் மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குஜராத்தை சேர்ந்த மாலுமியான கந்தர் நஹீம் அஜிஜ் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம் அடைந்தனர். மத்தியக்கிழக்கில் பதற்றநிலை தணியாத நிலையில், வணிக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.