கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாகக் கூறப்படும் தரமற்ற வெங்காயம் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமானது அல்ல - தமிழக அரசு. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடமிருந்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 கட்டங்களாக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் 03.09.2026 அன்று குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.