காத்மாண்டு,நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரப் பகுதியில் இன்று காலை 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பயணி ஒ. மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்..விபத்து'பிஷ்டெயில் ஏர்' மற்றும் 'ஏர் டைனஸ்டி' ஆகிய 2 தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேபாளம் நாட்டின் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் செல்லும் பாதையில், சுமார் 14,340 அடி உயரத்தில் வானில் பறந்து சென்று கொண்டிருந்தன. இதையடுத்து சோலுகும்பே மாவட்டத்தில் உள்ள பெரிச்சே ஹெலிபேடில், 2 ஹெலிகாப்டர்களும் சுமார் காலை 9:20 மணியளவில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றன. அப்போது, அவற்றின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.