ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு துணை கேப்டனாக ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆசியாவில் உள்ள கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தாரில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: கத்தாரில் உள்ள தோஹாவில் இந்த தொடர் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாட்டின் ஏ அணிகளும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் குழு பி பிரிவில் இந்தியா ஏ அணி இடம்பிடித்துள்ளது. இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில் பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணி பங்கேற்கின்றனர்.