Diwali Bonus: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. முதலில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.