Sharjah International Book Fair: First Tamil Book On Sharjah Ruler To Be Released. ஷார்ஜா: உலக அளவில் புகழ்பெற்ற 45-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தமிழ் இலக்கிய உலகிற்கு பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது. எழுத்தாளர் முதுவை ஹிதாயத் எழுதியுள்ள ஷார்ஜாவின் சிற்பி - மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி என்ற புத்தகம் வாசகர்களின் பார்வைக்கு வரவுள்ளது.இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்நூல் வெளியீட்டு விழா, வரும் 2026 நவம்பர் 5-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.