அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தோசை சுட்டு இந்தியர்களிடம் வாக்கு சேகரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் குடியுரிமைப் பெற்று குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் அளவிற்கு இந்தியர்களுக்கு செல்வாக்கு உள்ளது. செனட் தேர்தல்: அமெரிக்காவில் செனட் தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள 35 மாகாணங்களுக்கு செனட் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் பாக்ஸ்டனும், ஜனநாயக கட்சி சார்பில் ஜேம்ஸ் டலாரிகோவும் செனட் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.