வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, WHATS APP-இல் சேவையை தொடங்கியுள்ளது. இச்சேவையின் மூலம் கணக்குதாரர்களுக்கு PF இருப்புத்தொகை மற்றும் பாஸ்புக் விவரங்களை பெறமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் PF விவரம்! PF விவரங்களை பெற அலுவலகங்களை அணுகாமல், இணையதளத்தில் நீண்ட நேரம் செலவிடாமல் எளிதில் கணக்குதாரர்கள் விவரங்களை பெறும் நோக்கில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8796441800 என்ற EPFO -வின் வாட்ஸ்அப் எண்ணுக்கு 'Hi' குறுஞ்செய்தி அனுப்புதன் மூலம் CHAT-ஐ தொடங்கி மொழி உள்ளிட்ட சில விருப்பத்தேர்வுகளை உள்ளிட வேண்டும்.