தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது. மீறினால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பண்டிகைக் கால கூட்ட நெரிசலின்போது பாதுகாப்பான, சீரான மற்றும் சிரமமற்ற பயணத்தை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.