தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பட்டப்பகலில் கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான கொலைகள் முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளது. இந்த குற்றச்சம்பங்களை சுட்டிக்காட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அவ்வப்போது கொலை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மதுரையில் கொடூரமான கொலை ஒன்று அரங்கேறியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி மதுரை மாவட்டம் சமயநல்லூர் சடச்சியம்மன் நகரைச் சேர்ந்த 'குட்டிசாக்கு' என்ற சூர்யா.