முரசு புயலால் சென்னையில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய வெளியேற்றினர். முரசு புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவம்பர் 1) இரவு கனமழை கொட்டியது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.