Tomato And Onion Price: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து வெங்காயம், தக்காளி உயர்ந்துள்ள நிலையில் காய்கறிகள் விலை என்ன என்பதை பார்க்கலாம். அசைவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் தேவைப்படும் முக்கிய காய்களாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும். காய்கறிகள் குறைவாக வாங்கி சென்றாலும் பை நிறைய தக்காளி, வெங்காயம் வாங்கி செல்வது வழக்கம். இவைகள் விளைச்சல் பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து விலை அமைகிறது. இந்த இரண்டு காய்களின் விலையானது உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலை கஷ்டம் தான்.